ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த பி.டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). அரக்கோணத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று தரப்படும் என்ற அறிவிப்பை ஆன்லைன் மூலம் பார்த்து, அதில் உள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது, நாகர்கோயில் மாவட்டம் தோட்டார் தாலுகா வடவினை பகுதியை சேர்ந்த ஜீனோ(32) ரூ.3 லட்சத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் பைனான்ஸ் மூலம் ரூ.15 லட்சம் கடன்பெற்று தருவதாக கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பி அவரது வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்தை ஐயப்பன் அனுப்பினார். பணத்தை எடுத்து மோசடி செய்துவிட்டு, மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் தான் கடன்பெற்று தரமுடியும் என ஐயப்பனை, ஜீனோ மிரட்டி உள்ளார். இதுகுறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்று ஜீனோவை கைது செய்தனர். விசாரணையில் அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும், விரைவில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இதில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜீனோவை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>