மனைவி மாயம்; கணவன் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மனைவி மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த காரணி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல்(28). இவரது மனைவி ரேவதி(23). இவர் கடந்த 19ம் தேதி பகல் 1 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>