கூலிப்படையை ஏவி கணவன் கொலை ஆசிரியை, கள்ளக்காதலனுடன் கைது உடந்தையாக இருந்தவரும் கைது காட்டூரில் சர்வீஸ் சாலைக்கு எதிர்ப்பு பறக்கும் பாலம் கட்டக்கோரி வணிகர்கள் உண்ணாவிரதம்

திருவெறும்பூ. பிப்.24: திருச்சியி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மிகவும் நெரிசல் மிகுந்த சாலை ஆகும். பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை அரசு தொடங்கியது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி நேற்று இப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கைலாஷ் நகர் பஸ் ஸ்டாப் முன்பு வணிகர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜிலு தலைமை வகித்தார்.

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாரப்பன், ரகுநாதன், டாக்டர் பிரேம்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேரமைப்பின் தமிழ்நாடு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி பேசினார். போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி-தஞ்சை சாலை பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடைகள், வணிக நிறுவனங்கள், அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், சாலை விரிவாக்கம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை நிரந்தர தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கூறினார். போராட்டத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>