தர்மபுரி, ஏப். 25: தர்மபுரி மாவட்டம், அரூர் சங்கிலிவாடியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (52). இவர் தனியார் பள்ளி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், டூவீலரில் நண்பர் தம்பிதுரை(50) என்பவரை அழைத்து கொண்டு, கூத்தாடிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் அருகே சென்ற போது, திடீரென நிலைதடுமாறி தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கொங்கவேம்பு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். படுகாயம் அடைந்த தம்புதுரை, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
