கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடி பிப்.24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அணைத்து ஊராட்சிகள் உட்பட்ட மாற்று திறனாளிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சமையல் செய்து போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்ற படும் என்று அரசு உறுதி அளித்த பிறகும் தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாததை கண்டித்து மீண்டும் நேற்று காலை 10 மணியளவில் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று காலையில் இருந்து மாலை வரை ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் அனைவரும் பட்டினியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நாங்கள் 100 நாள் வேலையை வெயில் என்று பார்க்காமல் கிடக்கிறோம். அதேபோல எங்களுடைய குழந்தைகளுக்காக வெயிலில் கிடக்கிறோம் என்று பெற்றோர்கள் கூறினர்.

Related Stories: