மக்களுடைய தீர்ப்பு நல்லபடியாக இருக்கும்: சுந்தர்.சி எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் புதிய நீதிகட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுந்தர்.சி, சென்னையில் வாக்களித்த பின் மதுரைக்கு வந்தார். மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘மக்கள் உற்சாகத்துடனும், வேகத்துடனும் வந்து வாக்களிக்கின்றனர். மக்களின் வரவேற்பு சந்தோசமாக உள்ளது. மக்கள் மன்றத்துக்கு வந்தாச்சு. மக்களுடைய தீர்ப்பு நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Related Stories: