சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்

கடத்தூர், ஏப். 23: கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி சாலை வழியாக தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். முக்கிய இணைப்பு சாலையாக உள்ளதால் டூவீலர், பஸ், கார்கள் என வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை, சாலையோரங்களில் மூட்டை, மூட்டையாக இரவு நேரங்களில் கொட்டி செல்வதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை அகற்றவும், கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: