கடையம் விவசாயிகளுக்கு அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

கடையம், பிப். 24:   வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மேல ஆம்பூர், மந்தியூர், மஞ்சப்புளி, ஆழ்வார்குறிச்சி, கோவிந்தப்பேரி பகுதிகளைச் சேர்ந்த  விவசாயிகள் 40  பேர் மாநில அளவிலான விவசாய சிறப்பு பயிற்சிக்காக கடையம் வட்டார வேளாண் உதவிஇயக்குநர் ஏஞ்சலின் பொண்ராணி வழிகாட்டுதலின்பேரில் அலங்கார மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணை மற்றும் ஆராய்ச்சிநிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகுந்தலாதேவி தலைமையில் பங்கேற்ற கடையம் வட்டார விவசாயிகளுக்கு மீன் வள உதவிஇயக்குநர் கொளஞ்சிநாதன் மேற்பார்வையில் மீன் வள ஆய்வாளர் வேலுச்சாமி அலங்கார மீன் வளர்ப்பு குறித்தும் பண்ணைக்குட்டையில்  வளர்க்கப்படும் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்கள் உற்பத்தி செய்தல்  குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.  மீன் வள  மேற்பார்வையாளர் தமிழ்மணிகட்லா, ரோகு, மிர்கால்,சாதாகெண்டை மற்றும்  அலங்கார மீன் வகைகளான கோல்டு மீன் , கொய்க்கொண்டை,கப்பி, மோலி வளர்க்கும் முறைகள் குறித்து விளக்கினார். தொழில்முனைவோர்  பிரகாஷ் அலங்கார மீன் வளர்ப்பில் கிட்டும் லாபம், வண்ணமீன்கள் வளர்ப்பு  குறித்து  எடுத்துரைத்தார்.  ஏற்பாடுளை மீன் வள ஆய்வாளர்கள் ரத்னம் , சோனா உதவி வேளாண் அலுவலர் ஜெகன், கமல், பால்துரை, பேச்சியப்பன், கிருஷ்ணமுர்த்தி செய்திருந்தனர்.

Related Stories: