ஏற்றங்களை தரும் ஏகாதசி விரதம்

*விரதங்களிளே சிறந்த விரதமாக “ஏகாதசி விரதம்’’ கருதப்படுகிறது. “ஏகாதசி’’ என்றால் பதினொன்று என்று பொருள். வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 11வது திதி இதுவாகும்.
*முக்கியத்துவம்
மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான நாள் இது. இந்த நாட்களில் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால், உடனே வேண்டிக்கொண்டது நிறைவேரும்.
*பாவ விமோசனம்
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய வல்லமை இந்த விரதத்திற்கு உண்டு.
*அஸ்வமேத யாகம் பலன்
ஒரு ஏகாதசி விரதம் இருப்பது, ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்த புண்ணியத்திற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன.
*மனக்கட்டுப்பாடு
ஐம்புலன்களையும், ஐந்து கர்மேந்திரியங்களையும், மனதையும் (மொத்தம் 11) அடக்கி இறைவனை நினைப்பதே இதன் உண்மையான தாத்பர்யம்.
*வைகுண்ட பதவி
முறையாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மரணத்திற்குப் பின் பிறவிப் பெருங்கடலை நீந்தி, வைகுண்டத்தை அடைவர்.
*முன்னோர் வழிபாடு
இந்த விரதத்தின் புண்ணியத்தை நம் முன்னோர்களுக்கு அர்ப்பணித்தால், அவர்கள் பித்ரு லோகத்தில் மேன்மை அடைவார்கள்.
*அம்பரீஷன் கதை
மன்னன் அம்பரீஷன் ஏகாதசி விரதத்தின் மகிமையால்தான் துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து, விஷ்ணுசக்கரத்தால் காக்கப்பட்டார்.
*முப்பத்து முக்கோடி தேவர்கள்
ஏகாதசி அன்று அனைத்து தேவர்களும் விஷ்ணுவின் அருகாமையில் இருப்பதாக கூறப்படுகிறது.
*சகல செல்வங்கள்
இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு, வாழ்வில் வறுமை நீங்கி, செல்வம் மற்றும் நிம்மதி பெருகும்.
*உணவு தவிர்த்தல்
அன்று அரிசி உணவைத் தவிர்ப்பது முக்கியம். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
*அறிவியல் பின்னணி
சந்திரனின் ஈர்ப்பு விசையினால் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சீரமைக்க, இந்த உபவாசம். செரிமான மண்டலத்திற்கு ஓய்வளிக்கிறது.
*துளசி தீர்த்தம்:
ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்துவது, உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.
*இரவு விழிப்பு (ஜாகரணம்)
ஏகாதசி இரவு தூங்காமல் பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது, அதிக பலனைத் தரும்.
*தசமி மற்றும் துவாதசி
தசமி அன்றே ஒரு வேளை உணவருந்தி விரதத்தைத் தொடங்கி, துவாதசி அன்று பாரணை (விரதத்தை முடித்தல்) அதாவது துவாதசி அன்று காலையில் சீக்கிரம் பாரனை செய்ய வேண்டும்.
*அகத்திக் கீரை
துவாதசி அன்று அகத்திக் கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காய் சேர்த்து உண்பது வயிற்றில் உள்ள அசுத்தங்களை நீக்கும்.
*தானம்
ஏகாதசி முடிந்து துவாதசி அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.
*காயத்ரி மந்திரம்
ஏகாதசி நாளில் காயத்ரி மந்திரம் மற்றும் விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்.
*பயன்
இந்த விரதம் உடல் ஆரோக்கியத்தையும் (Detoxification), மன ஒருமைப்பாட்டையும் (Meditation) ஒரே நேரத்தில் வழங்குகிறது.

Related Stories: