அரசு ஓய்வூதியர்கள் சார்பில் கருத்தரங்கம்

ஈரோடு, பிப். 24: ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தில் ‘பொருளாதார நெருக்கடியும், அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

நிர்வாகிகள் ஹரிதாஸ், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் ‘பொருளாதார நெருக்கடியும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசியதாவது: படித்தவர்களுக்கு அதற்கான வேலை கிடைப்பதில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதும், மூடப்படுவதும், வேலை இன்மையை அதிகரிக்கிறது.

சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 70 ஆயிரம் பேர் ஒரே நாளில் ஓய்வு பெறும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியது. புதிய பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக பணியாகவும், கூலி அடிப்படையிலும் நிர்ணயிப்பதாலும் படித்தவர்கள் பாதிக்கின்றனர். உலக மயமாக்கலால் இந்திய தொழில் உற்பத்தி பாதித்து அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது.இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கின்றனர். இவற்றை சீரமைக்கும் வகையிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இவ்வாறு ராஜ்குமார் பேசினார்.

Related Stories: