மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது: 23ம் தேதி ஓட்டுப்பதிவு

 

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 152 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. ஏப்.23ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் இரண்டு கட்ட ேதர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்றும் (நாளை மறுதினம்), எஞ்சிய 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 அன்றும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில், 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதை தொடர்ந்து முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பள்ளிகள், வங்கிகள் மற்றும் மதுக்கடைகள் அனைத்தையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அந்தந்த வாக்குப்பதிவு நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா மற்றும் தென் வங்காளத்தின் பல தொகுதிகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நிறைவடையும் வரை அந்த பகுதிகளிலும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: