தனியார் பஸ்- லாரி மோதி பெண் படுகாயம்

காரிமங்கலம், ஏப்.21:காரிமங்கலம் அருகே லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பெண் உட்பட சிலர் காயம் அடைந்தனர். தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் கிருஷ்ணகிரி நோக்கி சென்றது. காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பிரிவு சாலை அருகே சென்ற போது, திடீரென லாரி குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய பஸ் லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. பஸ்சில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த பர்வீன் என்ற பெண் படுகாயமடைந்தார். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: