கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்காக போராடி வேலைவாய்ப்பை பெற்று தந்தது திமுக

 

நெல்லை,ஏப்.20: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு நேற்று கூடங்குளம் வடக்கு பஜார், கிழக்கு பஜார், மேற்கு பஜார், காமராஜர் சிலை அருகே, எஸ்எஸ்புரம், காந்திநகர், வைராவிகிணறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் பொதுமக்கள் சபாநாயகர் அப்பாவுக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

Related Stories: