சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி அகற்றம் திருச்சி அப்பல்லோ டாக்டர்கள் சாதனை

திருச்சி, பிப்.23: பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர். இதுகுறித்து அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சீனியர் டாக்டர் அழகப்பன் சொக்கலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு 54 வயது கொண்ட பெண் பொதுவான மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அவர் சிறுநீரகத்தில் டென்னிஸ் பந்து அளவிற்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் வழியில் இருந்தது. அவருக்கு புற்றுநோய் கட்டியால் எவ்வித தொந்தரவும் இல்லை. பெட்ஸ்கேன் பரிசோதனையில் உடலில் வேறு பாகங்களுக்கு புற்றுநோய் பரவாதது உறுதி செய்யப்பட்டது. டிஇஇ என்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அறுவைசிகிச்சை செய்து புற்றுநேய் கட்டி அகற்றப்பட்டது.

கட்டி பெரிதாக இருந்ததால் சிறுநீரகமும் அகற்றப்பட்டது. அதிக அளவில் ரத்தம் விரயமாகாமல் 8 மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது அந்த பெண் முழுமையாக குணம் அடைந்துவிட்டார். அறுவைசிகிச்சையின் போது இதயநோய், குடல்நோய், வாஸ்குலர் சிகிச்சை மற்றும் மயக்கவயில் டாக்டர்கள் உடனிருந்தனர். புற்றுநோய் கட்டி உதரவிதானத்தை தாண்டி மேல்நோக்கி பரவியிருந்ததால் இதயத்தை திறக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மட்டுமே நடந்துவந்த இதுபோன்ற சிக்கலான அறுவைசிகிச்சைகள் திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைகளிலும் இப்போது நடக்கிறது என்றார். டாக்டர்கள் சரவணன், சிவம், கார்த்திக், நந்தகுமார் உட்பட பலர் இருந்தனர். அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல் நன்றி கூறினார். திருச்சியில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும், தெற்கு மாவட்ட திமுக சார்பில் சத்திரம் அண்ணாசிலை அருகிலும் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஊரடங்கில் கொரோனா தொற்று பரவும் வகையில் நடந்ததாக கூறி முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் என கோட்டை போலீசார் 350 பேர் மற்றும் கோர்ட் போலீசார் 500 பேர் மீது என 850க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிந்துள்ளனர். மேலும், பொன்மலை போலீசார் அனுமதியின்றி வாகன பேரணி நடத்தியதாக திருவெறும்பூர் எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்பட 25 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்குபதிந்துள்ளனர்.

Related Stories:

>