1,000 பேர் மீது வழக்கு கல்மந்தை காலனி பகுதி மக்களுக்கு

திருச்சி, பிப்.23: திருச்சி கல்மந்தை காலனி பகுதி மக்கள் தங்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி பகுதி தந்தை பெரியார் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொதுமக்கள் அளித்த மனுவில், 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்மந்தை பகுதியில் குடியிருந்து வந்தோம். இதே பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் வீடு கட்டுவதாகவும், வசிப்பிடத்தை காலி செய்து தருமாறும், அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கிடைக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்து போட்டோ எடுத்துக்கொண்டனர். தற்போது வீட்டு வாடகை செலுத்த சிரமபட்டு வருகிறோம். எனவே அதிகாரிகள் உறுதியளித்தபடி போட்டோ எடுத்த அனைவருக்கும் வீடு ஒதுக்க டோக்கன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: