பில்லா பாளையம் வாய்க்கால் மேல்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் கலெக்டருக்கு கோரிக்கை

குளித்தலை. பிப். 23: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த லாலாபேட்டை சேர்ந்த நாகராஜன் என்பவர் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை யில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் அருகே பில்லா பாளையம் வாய்க்கால் மேல்பகுதி தடுப்பு சுவர் இல்லாமல் சாலையில் செல்லும் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அதனால் இந்த இடத்தில் சாலை ஓரத்தில் வாய்க்கால் பால மேல்பகுதி பொதுமக்கள் நலன் கருதி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என இந்நிலை குறித்த பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் பொதுப்பணி துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்து வருகின்றனர் அதனால் பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லாலாபேட்டை ரயில்வே கேட் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் வாய்க்கால் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துளளார்.

Related Stories:

>