நொச்சிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளிடம் ரூ.3.2 லட்சம், நகைகள் சிக்கின

திருப்பூர், ஏப். 17: திருப்பூர் நொச்சிபாளையம் அருகே சோதனை நடத்தியபோது பறக்கும் படை அதிகாரிகளிடம் ரூ.3.2 லட்சம், நகைகள் சிக்கியது. திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் திருப்பூர் துணை மாநில வரி அலுவலர் நாசர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் உகாயனூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் இருந்தார். காரில் ரூ.1.50 லட்சம் பணமும், ரூ.2.90 லட்சம் மதிப்புள்ள நகைகளும் (21 கிராம் கம்மல்) இருந்தன. ஆனால், அவரிடம் அதற்கான அதற்குண்டான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

காசிபாளையம் பகுதியில் இதே குழுவினர் சோதனை நடத்தியபோது கோகுல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் ரூ.1.52 லட்சம் பணம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூரில் ஒரே நாளில் ரூ.3.2 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: