வெள்ளத்துல தங்கி மீட்பு பணி செஞ்சோம்… டிடிவி. தினகரன் காமெடி

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தேஜ கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஸ்ரீவைகுண்டத்தில் பேசுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மழை பெய்து கடுமையான வெள்ளம் வந்தது. ஏரலுக்கு செல்ல வழியே இல்லை. ஸ்ரீவைகுண்டம், ஏரல், மாப்பிள்ளையூரணி பகுதிகளில் 2 நாட்கள் நாங்கள் தங்கியிருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டோம்.

2021ம் ஆண்டில் நாங்கள் பிரிந்து இருந்தோம். இப்போது எங்களது கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலில் பெண்கள் புரட்சி செய்து வாக்களிப்பார்கள். அதுதான் கடந்த தேர்தல்களிலும் நடந்துள்ளது. தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்’’ என்றார்.

ஏற்கனவே, தேசிய கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜ தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். டிடிவியும் கூட்டணி ஆட்சிதான் என்று கூறி வந்தார். ஆனால், அதிமுக தனிப்பெருன்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி கூறி வந்தார். கடந்த சில நாட்களாக எடப்பாடியுடன் பிரசாரம் செய்ததால் வாய் திறக்காமல் இருந்த டிடிவி.தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று கூறி உள்ளார்.

Related Stories: