பாகிஸ்தானில் தாக்குதல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச்சூடு

லாகூர்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பா. இந்த அமைப்பை ஹபீஸ் சையத்துடன் இணைந்து தொடங்கியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் பல இடங்களில் நடந்த தாக்குதல்களில் அமீர் ஹம்சாவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்க அரசு, லஷ்கர்-இ-தொய்பாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, அமீர் ஹம்ஸாவைத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானி அமைச்சர் மோஹ்சின் நக்விக்கு சொந்தமான 24 நியூஸ் எச்டி தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சியில் க ஹம்சா நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் புறப்பட்டு செல்லும் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஹம்சாவை லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Stories: