ஈரான் தவறான முடிவை எடுத்தால்..! மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…

வாஷிங்டன் : அமெரிக்கா பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் ஈரானுடனான தற்போதைய போர் சூழலில் அந்நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஈரான் தலைவர்கள் புத்திசாலித்தனமாக தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கினர். ஒரு மாத காலத்துக்கு பின்னர் இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இஸ்லாமாபாத்தில் முதல் சுற்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்கா பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஈரான் தவறான முடிவை எடுத்தால் அந்த நாட்டின் மின்சாரம் எரிசக்தி மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்பு மீது குண்டுகள் வீசப்படும் என்றும் கடல்வழி முற்றுகை தீவிரப்படுத்தப்படும் என்றும் செயலர் எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்கா ராணுவம் தாக்குதலுக்கு முழு தயார் நிலையில் இருப்பதாகவும் அதிபரின் உத்தரவு கிடைத்தால் தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய நாட்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து பேசிய பீட் ஹெக்செத் இதுவரை 7000க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வரும் நாட்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் இந்த நடவடிக்கையின் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் கூட்டு படை குழுவின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுக்கு உதவும் எந்த கப்பலையும் உள்ளே நுழையவிடமாட்டோம்.

ஈரான் எண்ணையை ஏற்றி செல்லும் இருண்ட கப்பல் (Dark Ships) உட்பட அனைத்தும் இதில் அடங்கும் என்றும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுக்கு செல்லும் அல்லது ஈரானில் இருந்து வரும் கப்பல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றி செல்கின்றனவா என சோதிக்கப்படும் என்று அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது. இத்தகைய கப்பல்கள் எங்கு இருந்தாலும் அவற்றை நிறுத்தி பரிசோதித்து பறிமுதல் செய்யும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஆயுதங்கள், ஆயுத அமைப்புகள், தோட்டாக்கள், அணுப் பொருட்கள், கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள், இரும்பு , எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கை ஈரானின் ஏற்றுமதியை மொத்தமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: