தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: