பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, வாழைத்தார் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரத்தில் புதன் மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார் கொண்டு வரப்பட்டு, அவை தரத்திற்கேற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், கடந்த சில மாதமாக வெயிலின் தாக்கத்தால் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகள் வாடி வதங்கியதுடன் அதன் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்து வழைத்தார் வரத்து கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக குறைவாக காணப்பட்டது.

இதில் நேற்று நடந்த சிறப்பு சந்தை நாளின்போது, வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தாலும், சில வாரத்திற்குபிறகு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழைத்தார் வரத்து இருந்தது.

மேலும், நாளை சித்திரை என்பதால், அனைத்து ரக வாழைத்தார்களும், கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் செவ்வாழைத்தார் ஒருகிலோ ரூ.60க்கும், பூவந்தார் ரூ.40க்கும், கற்பூரவள்ளி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.38க்கும், கேரள ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ரூ.45க்கும் விற்பனை செய்ய பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: