அரசு அலுவலர், ஆசிரியர்களுக்காக தர்மபுரியில் இருந்து திருச்சி சென்ற தபால் வாக்குகள்: கலெக்டர் ஆய்வு

தர்மபுரி, ஏப். 13: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களாக பதிவு செய்து, மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சல் வாக்குகள் வழங்கிட திருச்சி மையத்திற்கு கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது. இப்பணியை தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், `மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களாக பதிவு செய்து, மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் வாக்குகளை, அவர்கள் பணி புரிந்து வரும் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கிட, அஞ்சல் வாக்குகள் தயார் செய்து திருச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்புடைய மாவட்டங்களில் இருந்து வரும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலசுந்தரம், தேர்தல் தாசில்தார் அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்
உடனிருந்தனர்.

Related Stories: