அரூர், ஏப்.12: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ செம்மலை தலைமையில் நடைபெற்றது. அரூர் தனித் தொகுதியில் உள்ள 323 வாக்குச்சாவடிகளில், வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் நிலை பிஓ, பிஓ 1, என வாக்குச்சாவடியில் பணியாற்றும் பயிற்சி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் அரூர் தொகுதியில் பணிபுரியும் 850 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குசாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் தொடர்பாக குறும்படங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. தொகுதியின் பொது பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சரவணன், தாசில்தார் வள்ளி, பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி, ரஞ்சித், ஏழில்மொழி, பிரபு, பாலகிருஷ்ணன், சின்னண்ணன், மேகலா, பொன்னுசாமி அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
