அரியலூர் அரசு கலைக்கல்லூரி 56வது பட்டமளிப்பு விழா

அரியலூர், ஏப்.10: அரியலூர் அரசு கலைக்கல்லூரி 56வது பட்டமளிப்பு விழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில், தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் கலந்து கொண்டு, 851 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்;

ஜனநாயகத்தின் தூண்களை சரியாக வழிநடத்த நீங்கள் பெற்றிருக்கும் பட்டம் உறுதுணையாக இருக்கும் என்றார். விழாவுக்கு கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை வகித்தார்.நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: