குன்னம், ஏப். 10: குன்னம் சட்டமன்றத் தொகுதி, சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் கூட்டம் குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தேர்தல் ஆணைய செலவினப் பார்வையாளர் அனுஜ் கார்க் பங்கேற்றார். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களின் சந்தேகங்கள் தெளிவுப்படுத்தப்பட்டது.
வேட்பாளர்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணி முதல் கட்ட ஆய்வு 13.04.2026 அன்றும், இரண்டாம் கட்ட ஆய்வு 17.04.2026 அன்றும், மூன்றாம் கட்ட ஆய்வு 21.04.2026 அன்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இராண்டாவது தள கூட்ட அறையில் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெறஉள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வு கூட்டங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் செலவின முகவர்கள் உரிய அடையாள அட்டை, பதிவேடு, வங்கி கணக்கு அறிக்கை, மற்றும் ரசீதுகளுடன் தவறாது வேட்பாளர்களின் செலவின அறிக்கையை தாக்கல் செய்து சரிப்பார்க்க வேண்டும் என குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
