போலீசாருக்கு குடிநீர் பாட்டில் வழங்கல்; அரவக்குறிச்சியில் 12 மனுக்கள் நிராகரிப்பு

அரவக்குறிச்சி, ஏப். 8: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி: 45 வேட்புமனுக்களில் 33 ஏற்கப்பட்டன 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும், பல சுயேட்சை வேட்பாளர்கள் சார்பிலும் மொத்தம் 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது அனைத்து மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிமுறைகளின்படி 33 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தேவையான ஆவணங்கள் இல்லாமை, விதிமுறைகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு பரிசீலனை முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக வேட்புமனு வாபஸ் பெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளதால், இந்த தொகுதி தேர்தல் களம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: