வாக்குச்சாவடிகளில் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு வேலூர், காட்பாடி சட்டமன்ற தொகுதிகளின்

வேலூர், ஏப்.9: வேலூர், காட்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் காவல் பார்வையாளர் கவுஸ்தூப் சர்மா நேற்று பார்வையிட்டார். தேர்தல் காவல் பார்வையாளர் கவுஸ்தூப் சர்மா நேற்று மாலை வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி வஉசி நகர் வாக்குச்சாவடி மையம், பெருமுகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களையும், சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும், எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும், காந்தி நகர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருதம்பட்டு, மோட்டூர், காந்தி நகர் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: