கொரோனா தடுப்பூசி முகாம்

திருத்தணி, பிப்.21: திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் லோகநாயகி கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர். இதேபோல், திருத்தணி தாலுகா அலுவலகம் மற்றும் திருத்தணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது.

Related Stories:

>