பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (36). பனை ஏறும் தொழிலாளி. மருதம்புத்தூர், தேரடி மாடன் கோவில் அருகில் உள்ள இவரது தோட்டத்தில் பனைகளில் ‘கள்’ இறக்கி விற்பதாக ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ இசக்கிராஜா 2 போலீசாருடன் அந்த பகுதிக்கு நேற்று சென்றுள்ளார்.

தோட்டத்தில் மணிகண்டன் இல்லாததால் நேராக அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த மணிகண்டனை தோட்டத்திற்கு அழைத்து வந்து பனைமரத்தில் ஏறி ‘கள்’ பானை கட்டியிருந்தால் இறக்குமாறு எஸ்ஐ இசக்கிராஜா கூறியுள்ளார். இதையறிந்த உறவினர்களுக்கு விரைந்து வந்து எஸ்.ஐயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மணிகண்டனும் எஸ்ஐ இசக்கிராஜாவும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாகவும், இதில் எஸ்ஐ இசக்கிராஜா காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ இசக்கிராஜா துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை நோக்கி 4 ரவுண்டு சுட்டதில் இரண்டு அவர் காலில் பட்டது. இதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: