அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை ஒட்டி காரைக்காலில் அனைத்து வேட்பாளர்களும் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிவடையும் நிலையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட தனி ஹெலிகாப்டர் மூலம் வரிச்சிகுடி பாலிடெக்னிக் கல்லூரியில் வந்து இறங்கினார்.

அவரை காரைக்கால் மாவட்ட பாஜவினர் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது தேர்தல் பறக்கும் படை, அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை 15 நிமிடம் தீவிர சோதனை செய்தனர். ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டிருந்த பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவைகளை திறந்து பார்த்தும் சோதனை நடத்தினர். தொடர்ந்து அண்ணாமலை அங்கிருந்து திருநள்ளாறு பகுதிக்கு சென்று பாஜ வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோவில் பங்கேற்றார்.

Related Stories: