நெல்லை, தூத்துக்குடியில் இன்று விஜய் பிரசாரம்

தூத்துக்குடி: தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (8ம் தேதி) காலை 10:30 மணியளவில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகிறார். தொடர்ந்து அவர், நெல்லையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

பின்னர், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பிரசார வாகனத்தில் இருந்தபடி 15 நிமிடங்கள் பேசுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories: