பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோன்கள் மூலம் ஆயுதக் கடத்தல் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

 

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோன்கள் மூலமாகஆயுதம் கடத்தப்படுவது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் குறுக்கே டிரோன்கள் மூலம் வீசப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கண்ணி வெடிகளை மீட்டது தொடர்பாக பிப்ரவரி மாதம் பஞ்சாப் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாத செயல்பாட்டாளர் ஜஸ்வீர் சவுத்ரி, அவரது இந்திய கூட்டாளி சுபம் குமார் மற்றும் அடையாளம் தெரியாத பிற நபர்களின் பங்கு குறித்து விசாரிக்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு என்பது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி இந்தியாவில் தீவிரவாத செயல்களை நிகழ்த்துவதற்காக வெளிநாட்டு சக்தியால் திட்டமிடப்பட்ட குற்றச் சதித்திட்டம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் டிரோன் மூலமாக ஆயுதக் கடத்தலில் அடையாளம் தெரியாத பிற நபர்களின் பங்கு குறித்து விசாரணை செய்வதற்கு என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

 

Related Stories: