மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர் பதவியேற்பு

 

புதுடெல்லி: நாடு முழுவதும் தமிழ்நாடு(6) , மகாராஷ்டிரா(7), பீகார்(6), மேற்கு வங்கம்(5), ஒடிசா(4), அசாம்(3), தெலங்கானா(2), சட்டீஸ்கர்(2), அரியானா(2) , இமாச்சலப்பிரதேசம்(1) என்று மொத்தம் பத்து மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியானது நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தது. அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், திருச்சி சிவா (திமுக), தம்பிதுரை (அதிமுக), ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்(திமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), எம்.கிறிஸ்டோபர் திலக்(காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக) ஆகியோர் மாநிலங்களைவை உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இதேப்போன்று மகாராஷ்டிரா மாநிலத்தின், ராம்தாஸ் பந்த் அத்வாலே, மாயா சிண்ட்மன் இவ்னட், சரத் பவர், ராம்ராவ் சக்ரம், டாக்டர்.ஜோதி நாக்நாத் வாக்மரே ஆகியோரும், அதேப்போன்று மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, பபுல் சுப்ரியா பரல், மேனகா குருசாமி, ராஜீவ் குமார், ருக்குமணி மாலிக், பஸ்வாஜித் சின்கா ஆகியோரும், இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சண்ருப்ட் மிஸ்ரா, திலீப் குமார் ராய் மற்றும் மன்மோகன் சாமல் ஆகியோர் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மாநிலங்களைவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

Related Stories: