- தாதாத் ஜமாஅத்
- குல்ச்சல்
- தவ்ஹீத்
- ஜமாத்
- மாவட்டம்
- ஜனாதிபதி
- முகமது ஹுசைன்
- மாநில தணிக்கைக் குழு
- எம்.எஸ்.சுலைமான்
- சபாநாயகர்
- அப்துர் ரஹ்மான்…
குளச்சல், ஏப்.7: தவ்கீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் தலைமையில் குளச்சலில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் செயல் திட்ட பணிகள் குறித்து பேசினார். பேச்சாளர் அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் முகம்மது யாசிர், துணைத் தலைவர் நபில் அஹ்மத், துணைச் செயலாளர் முகம்மது ராபி, யஹ்யா, ஆசிக் உசேன், முபாரக் ஷா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள், பெண்கள் தஃவா குழு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் நடந்துவரும் வேளையில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் பா.ஜ. அரசை கண்டிப்பது, அரசியலமைப்புக்கு எதிரான எப்.சி.ஆர்.ஏ.சட்டம் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் சேவை நிறுவனங்களை முடக்குவதாகும். சிறுபான்மை விரோத போக்கு காட்டும் ஒன்றிய பா.ஜ.அரசை கண்டிப்பது எனவும், தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.இனி அமையவிருக்கும் அரசு இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
