×

பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு

கிருஷ்ணகிரி, ஏப்.9: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி கொல்லத்தகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரி(16). இவர் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், சில தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்பு பள்ளியில் நடந்து வருகிறது. இதற்கு ஹரி சென்று வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக அவர் சிறப்பு வகுப்பிற்கு செல்லவில்லை. வீட்டில் செல்போனில் கேம் விளையாடியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மனவேதனையில் இருந்த ஹரி, கடந்த 2ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Nagaraj ,Kollathakurukki ,Uttanapalli, Krishnagiri district ,Hari ,Government Boys' Higher Secondary School ,Rayakottai ,
× RELATED அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு