சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 1989, 1991 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி களம் காண்கிறார். வேட்புமனு தாக்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். ஆட்சிக்கு வந்ததும் விடுபட்ட திட்டங்களும் நிறைவேற்றித் தரப்படும். வரும் 15ஆம் தேதி குமரியில் பிரதமர் பரப்புரையில் கலந்துகொள்கிறேன்.
திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் சொல்வது அறியாமையின் வெளிப்பாடு என்று கூறினார்.
