உயிரை இழக்கலாம்; உரிமையை இழக்க கூடாது: சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவலாம்: வாக்கரிசி போடுங்க நிம்மதியா போறேன்… புலம்பிதள்ளிய சீமான்

பெரம்பலூர் தொகுதி (தனி) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா, குன்னம் தொகுதி வேட்பாளர் கீர்த்தி வாசன் ஆகியோரை ஆதரித்து பெரம்பலூர் காமராஜ் வளைவு பகுதியில் நேற்று கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பாஜ வந்துடும்னு சொல்றானுங்க.. ஒரு வீர மைந்தன் நிக்கிறேன்டா, நான் இருக்கிற வரை வராது… அப்படின்னு சொல்லுடா… நீ எனக்கு ஓட்டு போடலேன்னா போ, உடம்புல தெம்பு இருக்குற வரை இதே இடத்துல நின்னு கத்தி கத்தி கூட செத்துப்போவேன்.

ஆனா, இந்த சீட்டுக்கும், நோட்டுக்கும் எவன்ட்டையும் கையேந்துற அந்த பரம்பரையில பிறந்தவன் இல்லை. சரணடைந்து வாழ்வதற்கு சண்டையிட்டு சாவதே மேல். உயிரை இழக்கலாம், உரிமையை இழக்கக்கூடாது. மண்டியிட்டு வாழ்வதற்கு, மானத்தோடு மாண்டு போகலாம், மரணித்து போகலாம். இதுதான் உங்கள் பிள்ளைகளின் நிலைப்பாடு. இம்முறை என் பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி அவர்களை வெல்ல வையுங்கள், நீங்களும் வெற்றியடையுங்கள்.

இந்த பிள்ளைகள் கையில் நாடு இருந்தால் நாடும் மக்களும் பாதுகாப்பா இருப்பார்கள், நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வாக்கு தாருங்கள். இல்லையென்றால் காசை வாங்கிகொண்டு அவர்களுக்கு வாக்கை போட்டுவிட்டு எங்களுக்கு வாக்கரிசி போட்டு விட்டு விட்டு விடுங்கள். என் மக்கள் கிட்ட ஒண்ணுதான் சொல்லுவேன். நாங்க இருக்கிறது உங்களுக்கு இடையூறா இருந்ததுன்னா, இங்க வாயா என் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு சோத்துல விஷத்த வச்சு எங்களை கொன்று விட்டுருங்க. நிம்மதியா நாங்க செத்துப்போறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: