வெள்ளாண்டிவலசை புனித செல்வநாயகி அன்னை ஆலய பெருவிழா தொடக்கம்

இடைப்பாடி, ஏப். 6: இடைப்பாடி வெள்ளாண்டி வலசை புனித செல்வநாயகி அன்னை ஆலய 372வது பாஸ்கா மற்றும் திருவிழாவை, நேற்று முன்தினம் இரவு பங்குத்தந்தை பாஸ்கல் கொடியேற்றி துவக்கி வைத்தார். பங்குதந்தை இன்னாச்சி முத்து வரவேற்றார். நகர்மன்ற தலைவர் பாஷா, கமிஷனர் கோபிநாத், கொளந்தாகவுண்டர், மோகன், மயில்வாகனன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிறிஸ்தவ பங்கு மக்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 10ம்தேதி பாஸ்கா பெருவிழா, 20 மேடைகளில் 300 நடிகர், நடிகைகள் நடிக்கும் உலக மீட்பர் ஒலி ஒளியும் நாடக காட்சி நடைபெறுகிறது. 11ம்தேதி இரவு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நள்ளிரவு உயிர்ப்பு பாஸ்கா ஒலி ஒளி காட்சியும், தொடர்ந்து புனித செல்வஅன்னை ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

 

Related Stories: