விஜய்க்கு வரும் கூட்டம் ‘சும்மா’ தட்டி விட்டு போகும் நயினார்

 

நெல்லையில் நேற்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் நடிகர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூடுகின்ற கூட்டம் ஒரு போதும் ஓட்டுகளாக மாறாது. அவர் சினிமா நடிகர் என்பதால் மட்டுமே வரும் கூட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. தேர்தல் முடிவுகள் இதனை மக்களுக்கு புரிய வைத்து விடும். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி குமரி, சேலத்துக்கு விரைவில் வர உள்ளார். இதற்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை. சாத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று (6ம்தேதி) பகல் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்.

இதில் கலந்து கொள்ள மகாராஷ்டிரா முதலமைச்சரும் பாஜ மூத்த தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் தமிழகம் வருகிறார். மனுதாக்கலின் போது அவருடன் ஒன்றிய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். பாஜவின் தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியிடப்படும். தமிழக மக்களின் நலன்களுக்கான சிறப்பான திட்டங்கள் இடம் பெறும் வகையில் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழக மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் எங்கள் கூட்டணிக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: