ஆந்திரா, ஒடிசாவில் நள்ளிரவில் திடீர் நில அதிர்வு: தெருவில் தஞ்சமடைந்த மக்கள்

திருமலை: ஆந்திரா, ஒடிசாவில் நள்ளிரவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு தெருவில் தஞ்சமடைந்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென நில அதிர்வுகள் ஏற்பட்டது. முஞ்சங்கிபுட்டு, அரக்கு, பாடேரு மற்றும் ஹுக்கும்பேட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

நில அதிர்வு சில விநாடிகள் உணரப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நில அதிர்வு காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது. இதன் சத்தத்தை கேட்டு தூக்கத்தில் இருந்தவர்கள் பீதி அடைந்து அலறி அடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். நில அதிர்வுகள் சுமார் 30 வினாடிகள் நீடித்தது.

இந்த நில அதிர்வின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. இதேபோல் ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நில அதிர்வின் மையப்புள்ளியை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அல்லூரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 30 விநாடிகளுக்கு லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: