திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சசிதரூர் எம்பிபிரசாரம் செய்தார். இரவு 7 மணியளவில் வண்டூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் காரை மறித்தது. பின்னர் அந்தக் கும்பல் காருக்குள் இருந்த சசி தரூரை தாக்க முயன்றது. அவருடன் இருந்த பாதுகாவலர் கும்பலை தடுத்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து வண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வண்டூர் பகுதியைச் சேர்ந்த உமர் என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
