திருக்காட்டுப்பள்ளி, ஏப்.5: திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. இது சுற்றுலா தலமாகவும் உள்ளதால் தினந்தோறும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பண்ணிரெண்டாம் வகுப்பிற்கு அரசு பொது தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டள்ளது.
அது மட்டுமின்றி புனித வெள்ளியை தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கல்லணைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள அனைத்து வரலாற்று புராதன சின்னங்களை பார்த்து மகிழ்ந்தனர். மேலும், கரிகாலன் பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
