மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோர உணவகத்துக்குள் ஆம்னி பேருந்து புகுந்ததால் பரபரப்பு

 

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோர உணவகத்துக்குள் ஆம்னி பேருந்து புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி – திருச்சி 4 வழிச்சாலையில் பள்ளப்பட்டி எனும் இடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி நோக்கிச் சென்ற பேருந்து, டயர் வெடித்து சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியது. பேருந்து மோதி சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் உணவகத்துக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

பள்ளப்பட்டி 4 வழிச்சாலையில் நடந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், பயணிகள் 2 பேர் என 3 பேர் காயம் அடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து, வேன் உணவகத்துக்குள் புகுந்ததில் கடையின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.

 

Related Stories: