ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக் காப்பாற்றித் தந்த எனக்கே சீட் வழங்கவில்லை: முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி

 

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக் காப்பாற்றித் தந்த எனக்கே சீட் வழங்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்துள்ளார். அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தனபாலுக்கு வேறு எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த போதிலும் தற்போது கட்சிக்குள் தனக்கு மரியாதை இல்லை

அதிமுகவின் மிக மூத்த நிர்வாகியான தனபால், அமைச்சர், சபாநாயகர் என பல பொறுப்புகளை வகித்தவர். அவிநாசியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான தனபாலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு வழங்கிய எடப்பாடி, தனபாலுக்கு சீட் வழங்காமல் புறக்கணித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அவிநாசி தனித் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு தனபால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவிநாசியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்தபோதும் தனபாலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. விருப்ப மனு அளித்த தன்னிடம் போட்டியிட விருப்பமா? இல்லையா? என்று கூட யாரும் கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தேன். ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தபோதிலும் தற்போது கட்சிக்குள் தனக்கு மரியாதை இல்லை என தனபால் குமுறுகிறார்.

ராசிபுரம், அவிநாசி தனித் தொகுதிகளை அதிமுகவுக்கு அழுத்தம் தந்து பாஜக பெற்றதாக தனபால் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். பாஜக சொன்ன அனைத்திற்கும் எடப்பாடி வளைந்து கொடுத்து செல்வதாக தனபாலின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அரசியல் பழகிய மூத்த அரசியல்வாதி தனபாலுக்கு எடப்பாடி துரோகம் செய்துவிட்டதாக ஆதரவாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எடப்பாடி தனபாலுக்கு செய்தது மிகப்பெரிய துரோகம் என அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதிமுகவில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனக் கூறி தனபாலின் மகன் லோகேஷ் விலகினார். அதிமுகவில் இருந்து விலகிய லோகேஷ் தனபால் த.வெ.க.வில் இணைந்து ராசிபுரத்தில் போட்டியிடுகிறார்.

Related Stories: