பழநியில் சுயேட்சை உட்பட 2 பேர் வேட்புமனு தாக்கல்

பழநி, ஏப்.3: தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் வரும் 6ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பழநி அருகே ஆயக்குடி, நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து (49), சுயேட்சையாக பழநி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (32) ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த 30ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் முருகேஷ்வரி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்படி பழநி சட்டமன்ற தொகுதிக்கு நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உள்ளது. இன்று (வெள்ளி) புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் நாளை (சனி) முக்கிய அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Related Stories: