மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடலூர், ஏப். 3: கூடலூர் தெற்கு காவல் நிலைய எஸ்ஐ பாண்டிச்செல்வி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயில் அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் அவர், கூடலூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சிவகாமன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 25 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதேபோன்று அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே, அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த தமிழரசி (55) என்பவரிடமிருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்த போலீசார், சிவகாமன், தமிழரசி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

 

Related Stories: