தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்

தூத்துக்குடி, ஏப். 3: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் இளம்பகவத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1800-599-1960, வாட்ஸ்அப் செயலி எண் 94864 54714 மற்றும் சி-விஜில் என்ற செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: