ரூ.9 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி, ஏப். 3: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினரால் இதுவரை ரூ.9 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் இதுவரை ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 298 மதிப்பிலான பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 837 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 லட்சத்து 37 ஆயிரத்து 330 ரொக்கப்பணம், ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 600 மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 780 ரொக்கப்பணம் விடுவிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: