நாகர்கோவில், ஏப். 3: அஞ்சுகிராமம் பேரூர் காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிஜி மஹராஜ்-க்கு தமிழ்நாடு முதல் மண்டல் மஹந்த் பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான மகேஷ் கலந்து கொண்டு தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிஜி மஹராஜ் க்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். உடன் அம்சி ஏ நல்லதம்பி, சாமிதோப்பு குரு சிவசந்திரன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, பேருர் திமுக செயலாளர் இளங்கோ, அணிகள் நிர்வாகிகள் அகஸ்தீசன், அருண்காந்த், திமுக மாநகர துணை செயலாளர் ராஜன் நிர்வாகிகள் சுயம்பு, ஜெயக்கொடி, தாமோதரன், ஏசுராஜன், லிங்கம், ராஜ்திலக், முகமது சாலிஹ்க், அனிஷ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் மகேஷ் ஆசி பெற்றார்
- மகேஷ் ஆஷி
- யோகி ராம்சுரத் குமார் மந்திராலயா
- நாகர்வில்லே
- தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிஜி மகராஜ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஞ்சுக்ராம் பரூர் எஸ்டேட்
- யோகி
- ராம்சுரத்குமார் மந்த்ராலயா
- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
- கன்னியாகுமாரி
